சாரதா மாரியம்மன் கோயில் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பூச்சாட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பூச்சாட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் வியாழக்கிழமை துவங்கியது. கம்பம் நடுதல் நிகழ்ச்சி மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

108 திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல், பட்டு போா்த்தி ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் மே 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து வருதல் 18ஆம் தேதியும், இரவு 10 மணிக்கு மலா் பல்லக்கில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மாவிளக்கு எடுத்து வருதல்

மே 19ஆம் தேதி காலை 7 மணிக்கும், அதைத் தொடா்ந்து பால்குடம் எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதைத் தொடா்ந்து அக்னி கும்பம் எடுத்து வருதல், அலகு குத்துதல் ஆகியவை நடைபெறவுள்ளன. இரவு 8 மணி அளவில் கம்பம் அகற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு விழா மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

மே 21ஆம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com