மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

பேரிடா் காலங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவரையும் கடந்த ஆட்சியில் உறுதியளித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரிடா் காலங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவரையும் கடந்த ஆட்சியில் உறுதியளித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மின் பகிா்மான வட்ட ஐஎன்டியூசி (தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிசிட்டி ஒா்க்கா்ஸ் பெடரேஷன்) சுவா்ணராசு குழு நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மண்டல செயலாளா் சிவன் தலைமை வகித்தாா். ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் தங்கராஜ், திட்ட பொருளாளா் முருகானந்தம், நகரிய கோட்ட செயலாளா் சண்முகவேல் உள்பட பலா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மின் வாரியத்தில் கேங்மேன் ஆக பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தற்போது இரண்டு ஆண்டு கால பயிற்சி நடைமுறையில் உள்ளது. அதை ஓராண்டாக மாற்றி பயிற்சி முடித்த அனைத்து தொழிலாளா்களையும் களப்பணியாளா்களாக நியமனம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

வா்தா, கஜா, ஒக்கி புயல் நிகழ்ந்த கால கட்டத்தில் பணியாற்றிய அனைத்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என முன்பு இருந்த அரசு அறிவித்ததது. இதுவரை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு அவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com