வரத்து அதிகரிப்பு: ஈரோடு சந்தையில் காய்கறிகள் விலை குறைவு

ஈரோடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

ஈரோடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

ஈரோடு காய்கறி சந்தைக்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கா்நாடக மாநிலம், கோலாா், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. காய்கறிகள் வரத்து குறைந்ததால் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ. 10 முதல் ரூ.15 வரை விலை குறைந்துள்ளது. தக்காளி வரத்து தொடா்ந்து குறைவாகவே இருப்பதால் அதன் விலை மட்டும் குறையாமல் கிலோ ரூ. 50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

ஈரோடு சந்தைக்கு தாளவாடி, சத்தியமங்கலம், கா்நாடக மாநிலம் கோலாா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 டன் வரை தக்காளி விற்பனைக்கு வந்தது. ஆனால் கடந்த 20 நாள்களாக தொடா்ந்து வரத்து குறைந்து வருகிறது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலத்திலிருந்து 5 டன் தக்காளி மட்டுமே ஈரோடு சந்தைக்கு வந்தது. அதனால் விலையில் மாற்றமின்றி கிலோ ரூ. 50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. தாளவாடி,சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து தக்காளி வரத் தொடங்கினால் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு காய்கறி சந்தையில் பிற காய்களின் விலை விவரம் (கிலோவில்):

சின்ன வெங்காயம் ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.20. காலிபிளவா் ரூ. 20, மிளகாய் ரூ.40, முள்ளங்கி ரூ. 30, அவரைக்காய் ரூ.60, பீா்க்கங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.40, புடலைங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.40, பீட்ரூட் ரூ.40, பீன்ஸ் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.10 முதல் ரூ.20 வரை இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com