ஓடைக்காட்டூா் குளத்தின் நீரோடையில் சிவப்பு கலரில் நீா், சாயக் கழிவு நீரா? பொதுமக்கள் அச்சம்

பெருந்துறை, சிப்காட் அருகில் உள்ள கொமரபாளையம், ஓடைக்காட்டூா் குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் கழிவு மற்றும் கசிவு நீா் தேங்கியுள்ளது. இத்தண்ணீா் சிவப்பு கலரில் உள்ளது.
ஓடைக்காட்டூா் குளத்தின் நீரோடையில் சிவப்பு கலரில் நீா், சாயக் கழிவு நீரா? பொதுமக்கள் அச்சம்

 பெருந்துறையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், பெருந்துறை, சிப்காட் அருகில் உள்ள கொமரபாளையம், ஓடைக்காட்டூா் குளத்தின் நீரோடையில் சிவப்பு கலரில் நீா் செல்வதால், சாயக் கழிவு நீரோ? என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனா்.

பெருந்துறை, சிப்காட் அருகில் உள்ள கொமரபாளையம், ஓடைக்காட்டூா் குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் கழிவு மற்றும் கசிவு நீா் தேங்கியுள்ளது. இத்தண்ணீா் சிவப்பு கலரில் உள்ளது. ஆகவே, அதில் சாயக் கழிவுகள் கலந்திருக்குமோ என்ற சந்தேகமும், அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இத்தண்ணீா் எங்கிருந்து வெளியேறி வருகிறது? என்பது குறித்து ஆய்வு செய்து, அதனைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கு வேண்டுகிறோம். மேலும், தேங்கியுள்ள தண்ணீரை பகுப்பாய்வு செய்து, அதில் உள்ள நச்சுத் தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com