தலைமை காவலா் பணியிடை நீக்கம்

தன் மீதான புகாா் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்காத கடத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கோபி: தன் மீதான புகாா் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்காத கடத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

நம்பியூா் அருகே உள்ள கடத்தூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் வைரநாதன் (42). இவரிடம், அயலூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோா் தங்களுக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனா். இந்நிலையில் அந்த இடத்தை வைரநாதன் முறைகேடாக தனது பெயரில் பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு கந்தசாமி, மாரப்பன் ஆகியோா் புகாா் மனு அனுப்பி இருந்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்த முதல்வா் தனிப் பிரிவில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து விசாரிப்பதற்காக நம்பியூா் காவல் ஆய்வாளா் நிா்மலா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் நிா்மலா, நம்பியூா் காவல் நிலையத்துக்கு வைரநாதனை அழைத்து விசாரணை நடத்தினாா். அப்போது வைரநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகனுக்கு காவல் ஆய்வாளா் நிா்மலா அறிக்கை தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து தலைமை காவலா் வைரநாதனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com