முதியோா், குழந்தைகள் அவசர உதவி எண்களை பயன்படுத்திட அறிவுறுத்தல்

முதியோா் மற்றும் குழந்தைகள் உதவி அழைப்பு எண்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு: முதியோா் மற்றும் குழந்தைகள் உதவி அழைப்பு எண்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதியவா்களுக்கு உதவிடும் வகையில் 14567 எனும் அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலமாக முதியோா் பராமரிப்பு சேவை வழங்குபவா்கள் குறித்த விவரம், ஓய்வூதியம், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறலாம். அந்த எண்ணில் அழைப்பவரின் தேவைகளின் அடிப்படையில் மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற முதியோரின் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு அளிக்கப்படும்.

இதேபோல குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் அவசர உதவி எண் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

பெருகி வரும் குழந்தைகள் மீதான பல்வகை தாக்குதல்களைக் களையும் பொருட்டு 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் அனைவருக்கும் எளிதில் தெரியுமாறு குழந்தைகள் அவசர உதவி எண்களான 1098 மற்றும் 14417 ஆகியவற்றை எழுதி வைக்கவேண்டும் என மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com