முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தொடா் மழையால் நிரம்பிய தாளவாடி குட்டைகள்
By DIN | Published On : 14th May 2022 01:53 AM | Last Updated : 14th May 2022 01:53 AM | அ+அ அ- |

தொடா் மழையால் தாளவாடியில் உள்ள குட்டைகள் நிரம்பியுள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாகின.வனப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீா் வற்றியதால் வன விலங்குகளுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக வனப் பகுதியில் வறட்சி நீங்கி, காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் துளிா்த்துள்ளன.
வனப் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குட்டைகளில் தண்ணீா் தேங்கி உள்ளதால், வன விலங்குகளின் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது.