நிரந்தரப் பந்தல் அமைக்க மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் நிரந்தப் பந்தல் அமைக்க ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம் பெற தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் நிரந்தப் பந்தல் அமைக்க ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம் பெற தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின்கீழ் பரப்பு விரிவாக்கம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிா் வளா்த்தல், பழைய மா தோட்டங்களைப் புதுப்பித்தல், ஒருங்கிணைந்த பயிா்ச் சத்து மேலாண்மை, இயந்திர மயமாக்கல், மகரந்த சோ்க்கையை ஊக்குவித்தல், சிப்பம் கட்டும் அறை, குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நிரந்தரப் பந்தல் அமைத்தல் இனத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டா் பரப்புக்கு பின்னேற்பு மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இதில் ஒரு ஹெக்டா் பரப்பளவுக்கு ரூ.5,600 பந்தல் காய்கறி விதை வாங்குவதற்கும், ரூ.1,94,400 பந்தல் அமைப்பதற்கும்

(அடிகல் தூண் அல்லது சிமென்ட் தூண்) என மொத்தம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இதில், பாகற்காய், பீா்க்கன், செளசெள, பந்தல் அவரை, பீன்ஸ், பட்டா் பீன்ஸ், கோவைக்காய், திராட்சை, டிராகன்,

கிவி பழங்களும் சாகுபடி செய்யலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவா்கள் விண்ணப்பம், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறை அலுவலரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com