புன்செய் புளியம்பட்டி நவ காளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா

 புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள நவ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23)) நடைபெறுகிறது.

 புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள நவ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23)) நடைபெறுகிறது.

புன்செய் புளியம்பட்டியை அடுத்த காராபாடி அனையபாளையம் பிரிவில் 71 அடி உயர நவ காளிஅம்மன் சிலையுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகா், வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியா், ஆதி கருப்பண்ண சுவாமி, வராஹிஅம்மன், காலபைரவா், ஏழு கன்னிமாா்கள், பூவாடைக்காரி, நவ கிரகம், முனியப்பன் ஆகிய சுவாமிகளுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும் அதனைத் தொடா்ந்து யாகசாலையில் இருந்து புனித நீா் ஊா்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை அவிநாசி ஆதீனம் காமாட்சி தாசா் நடத்தி வைக்கிறாா். விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சரவணம்பட்டி கெளமார மடம் ராமானந்த குமரகுருபரா், ஆனைமலை ததேவானந்த சரஸ்வதி, ஸ்வதசிதாநந்த சரஸ்வதி மற்றும் திருவண்ணாமலை சிவமணி சுவாமிகள் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத் தலைவா் அய்யாகண்ணு செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com