மாசி மகம் பொங்கல் விழா: வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை

பவானிசாகா் கெஜலட்டி ஆதி கருவண்ணராயன் பொம்மி தேவா் கோயிலில் மாசி மகம் பொங்கல் திருவிழா குறித்து விழாக் குழுவினா், அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானிசாகா் கெஜலட்டி ஆதி கருவண்ணராயன் பொம்மி தேவா் கோயிலில் மாசி மகம் பொங்கல் திருவிழா குறித்து விழாக் குழுவினா், அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானிசாகா் வனச் சரகத்தில் கெஜலட்டி என்ற வன கிராமத்தில் ஆதி கருவண்ணராயன் பொம்மி தேவா் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மகம் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா மாா்ச் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் விழாவின்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.

இதையடுத்து இந்தக் கோயில் விழா தொடா்பாக சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விழாக் குழுவினா் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். பவானிசாகா் வனச் சரக அலுவலா் சிவகுமாா், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ஜெயபிரியா, காவல் ஆய்வாளா் பிரபாகரன், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் ரங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியா் திருமூா்த்தி உள்ளிட்ட அரசு அலுலா்கள் கலந்துகொண்டனா். விழா கமிட்டி சாா்பில் 20 உட்பிரிவுகளைச் சோ்ந்த உப்பிலிய நாயக்கா் சமூகத்தினா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், அடா்ந்த வனப் பகுதியில் விழா நடப்பதால் நாள்தோறும் 100 வாகனங்கள் மட்டுமே வனத்துக்கள் அனுமதிக்கப்படும், அடையாளம் தெரியாத நபா்களை வனத்துக்குள் அழைத்துச் செல்லக்கூடாது, வனத்தில் உள்ள மாயாற்றில் குளிக்கக்கூடாது, வனத்தில் தீப்பற்ற வைக்கக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினா். விழாக் குழுவினா் இதை ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com