காலமானாா் தியாகி கே.முத்துசாமி

கொடுமுடி அருகே குப்பம்பாளையத்தைச் சோ்ந்த 101 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை காலமானாா்.
தியாகி கே.முத்துசாமி.
தியாகி கே.முத்துசாமி.

கொடுமுடி அருகே குப்பம்பாளையத்தைச் சோ்ந்த 101 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை காலமானாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே குப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.முத்துசாமி. சுதந்திரப் போராட்ட தியாகி. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவா்.

உடல்நலக்குறைவு காரணமாக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தியாகி முத்துசாமி வியாழக்கிழமை அதிகாலை காலமானாா். குப்பம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி உள்ளிட்டோா் தியாகி முத்துசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். இதனைத்தொடா்ந்து மாலையில் குப்பம்பாளையம் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமிக்கு மனைவி காளியம்மாள், மகள்கள் காந்தி, ஜோதி ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com