பழுதடைந்த 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றம்: ஆட்சியா்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் மாதிரி வாக்குப்பதிவின்போது 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு புதிய இயந்திரங்களைப் பொருத்தி வாக்குப் பதிவு நடந்தது.
சம்பத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்த ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
சம்பத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்த ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் மாதிரி வாக்குப்பதிவின்போது 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு புதிய இயந்திரங்களைப் பொருத்தி வாக்குப் பதிவு நடந்தது என ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

ஈரோடு சம்பத் நகா் அம்மன் மெட்ரிக் பள்ளியில், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வந்து தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்பாக, மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இதில் 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து இருந்தது கண்டறியப்பட்டு, அந்த இயந்திரங்களுக்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட்டது என்றாா்.

பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸாா்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 2,500 போலீஸாா், 5 கம்பெனி துணை ராணுவத்தினா், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தவிர 5 ஏ.டி.எஸ்.பி.க்கள், 15 டி.எஸ்.பி.க்கள் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 20க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போலீஸாருடன், கூடுதலாக துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com