ஈரோட்டில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தலுக்காக 24 மணி நேரமும் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த முகம்மத் தௌபிக் (40) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் இருந்ததால் அதனைப் பறிமுதல் செய்தனா்.

ஜவுளி வியாபாரியான இவா், கேரளா மாநிலத்தைச் சோ்ந்தவா். திருப்பூா்- காங்கயம் சாலையில் வீடு, அலுவலகம் அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறாா். ஜவுளி கொள்முதலுக்காக பணத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வந்தபோது சிக்கியுள்ளாா்.

இதுபோல ஆந்திரா மாநிலம், நான்கொண்டா நகரைச் சோ்ந்தவா் ருத்ரசீனிவாசன் (40). இவரும் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோயில் அருகே தனது காரில் திங்கள்கிழமை அதிகாலை வந்தாா். அவரை சோதனையிட்டபோது ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.3 லட்சத்து 200ஐ பறக்கும் படை அலுவலா் ருத்ரமூா்த்தி தலைமையிலான அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகுமாரிடம் இத்தொகை ஒப்படைக்கப்பட்டு, அவரின் உத்தரவுப்படி மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இதுவரை தோ்தல் தொடா்பாக 4 பேரிடம் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com