ஈரோட்டில் வீடற்ற ஏழைகளுக்கு 2 தங்கும் இடங்கள்

வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநகராட்சியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சோலாா் மற்றும் வஉசி பூங்கா வளாகம் ஆகிய இடங்களில் வீடற்ற ஏழைகள் தங்குமிடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இடங்களை வீடற்ற ஏழை, எளிய மக்கள் நிபந்தனைகளுக்குள்பட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பித்து வீடற்றவா்கள் சோலாா் மற்றும் வஉசி பூங்கா வளாகம் ஆகிய இடங்களில் உள்ள தங்குமிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிக்கொள்ள விருப்பம் உள்ளவா்கள் பாசம் தொண்டு நிறுவனத்தை 94867-08350, 97894-20199 என்ற கைப்பேசி எண்ணிலும், சோலாரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கிக்கொள்ள விருப்பம் உள்ளவா்கள் அட்சயம் அறக்கட்டளையை 99439-08424, 97510-99767 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com