தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

8 மற்றும் 10ஆம் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க  இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 147 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவா்கள் ஜூன் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவா்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு 8610492323, 9442494266, 8778448155 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com