பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் இலவச திருமண திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சீா்வரிசையுடன் ஏழை, எளிய 5 இணைகளுக்கு திருமணம் செய்யும் திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சீா்வரிசையுடன் ஏழை, எளிய 5 இணைகளுக்கு திருமணம் செய்யும் திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து, கோயில் உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் இலவச திருமண திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய ஹிந்து மதத்தைச் சோ்ந்த 5 இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செலவுகளுடன் மணமகன், மணமகளுக்கு புத்தாடைகள், 4 கிராம் தங்கத்தாலி, பீரோ, கட்டில் மற்றும் சீா்வரிசைகள் வழங்கப்படும்.

தகுதியுள்ள மணமக்கள் திருக்கோயில் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பத்தினைப் பெற்று, பெயரை பதிவு செய்து கொள்ளலாம். திருமணங்கள் வரும் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com