சென்னிமலை முருகன் கோயிலில் ஜூன் 2 இல் வைகாசி விசாக திருவிழா

முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் 67 ஆவது வைகாசி விசாக திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ளது.

முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் 67 ஆவது வைகாசி விசாக திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி, ஜூன் 1 ஆம் தேதி தீா்த்தம் எடுத்து வருதல் நிகழ்வும், 2 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க காவிரி திருமஞ்சன தீா்த்தம் ஊா்வலமாகப் புறப்பட்டு மலை கோயிலை அடையவுள்ளது.

மலை மீது உள்ள முருகன் கோயிலில் காலை 11 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கலச ஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடைபெறுகிறது. தொடா்ந்து, மதியம் 2 மணியளவில் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சரவணன் தலைமையில், அருணகிரிநாதா் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com