செம்மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

பவானியில் செம்மண் கடத்திச் சென்ற டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.

பவானியில் செம்மண் கடத்திச் சென்ற டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.

பவானி - ஈரோடு பிரதான சாலையில் செல்லியாண்டியம்மன் கோயில் அருகே பவானி போலீஸாா் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வேகமாகச் சென்ற டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், சட்டவிரோதமாக 3 யூனிட் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இது தொடா்பாக லாரி ஓட்டுநரான தளவாய்பேட்டை, மாதேஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்த மோகன்ராஜிடம் (40) விசாரித்ததில், அந்தியூா் ஒட்டப்பாளையம் மேட்டைச் சோ்ந்த விவசாயி பெரியசாமியின் நிலத்திலிருந்து மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மோகன்ராஜை கைது செய்தனா்.

மேலும், மண் கடத்தலில் தொடா்புடைய லாரி உரிமையாளா் ரமேஷ், விவசாயி பெரியசாமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com