சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பிரசாரம்

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சாா்பில் 34ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, சாலை விபத்தினை 50 சதவீதம் குறைப்போம் என்ற தலைப்பில் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஈரோடு பேருந்து நிலையத்தில் வெளளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலத்தின் பொதுமேலாளா் எஸ்.சொா்ணலதா தலைமை வகித்தாா். வணிக மேலாளா் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளா் செல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மேலும் அவா் சாலை விபத்து குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை பயணிகள் மற்றும் ஓட்டுநா், நடத்துநா்களிடம் வழங்கி

கூறியதாவது:

விழிப்புணா்வு பிரசார வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இந்த வாகனத்தில், சீட் பெல்ட் அணிவது குறித்தும், 4 வழிச் சாலையில் செல்லும்போது எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சுரேந்திரகுமாா், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com