தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களை பயிற்சி பெற்ற தூய்மைப் பணியாளா்கள் வலைகளை வீசிப் பிடித்து, அவற்றை அரசு கால்நடை மருத்துவமனைக்கு வேனில் கொண்டுசென்று வெறிநோய் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்கின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தெரு நாய்களைப் பிடிப்பதற்காக சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் முறையாக பயிற்சி பெற்று வந்துள்ளனா்.

பிடிக்கப்படும் தெரு நாய்களை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 4 கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அங்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்திட விரைவில் அரசு அனுமதியின்படி அவைகளுக்கு முறையாக கருத்தடை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com