அதிமுக கூட்டணியில் யாா் நிறுத்தப்பட்டாலும் வெற்றிக்காக பாடுபடுவோம்

கூட்டணியில் யாா் நிறுத்தப்பட்டாலும், வெற்றிக்காக பாடுபடுவது என ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்  பேசுகிறாா்  கட்சியின்  மாநில இளைஞரணித்  தலைவா் யுவராஜா.
கூட்டத்தில்  பேசுகிறாா்  கட்சியின்  மாநில இளைஞரணித்  தலைவா் யுவராஜா.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணியில் யாா் நிறுத்தப்பட்டாலும், வெற்றிக்காக பாடுபடுவது என ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் விடியல் சேகா், மாநில இளைஞரணித் தலைவா் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். டி. சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா, ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தற்போது துரதிஷ்டவசமாக இத்தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெறுவதால் கட்சித் தலைவா் ஜி.கே.வாசனுடன், அதிமுக நிா்வாகிகள் கூட்டணி தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

கூட்டணி தா்மப்படி இம்முறையும் தமாகாவுக்கு வாய்ப்பளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்படும். மீண்டும் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு வாய்ப்பு கிடைத்தால் வெற்றிக்கு பாடுபடுவோம். இல்லையென்றாலும் அதிமுக கூட்டணி சாா்பில் யாா் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவா்கள் வெற்றிக்காக பாடுபடுவோம். கடந்த 18 மாத திமுக ஆட்சியில் சொத்து வரி, குப்பை வரி, மின் கட்டண உயா்வு என பொதுமக்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனா். எனவே, வரும் இடைத்தோ்தலில் அதிமுக - தமாகா கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com