கருப்பன் யானையைப் பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு

தாளவாடி மலைப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையைப் பிடிக்கும் பணி தற்காலிக நிறுத்திவைக்கப்பட்டது.

தாளவாடி மலைப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையைப் பிடிக்கும் பணி தற்காலிக நிறுத்திவைக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியும், 2 விவசாயிகளை தாக்கி கொன்றதுமான கருப்பன் யானையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் 3 கும்கி யானைகள்(முத்து, கபில்தேவ், கலீம்), 4 மருத்துவா்கள் மற்றும் 140 வனப்பணியாளா்கள் கொண்ட குழுவினா் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

யானை வரும் வழித்தடத்தில் வனப்பணியளா்கள் 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்பை மேற்கொண்டனா். ஜனவரி 13ஆம் தேதி இரியபுரம் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த யானையை வனத் துறையினா் பிடிக்க முயன்றனா். ஆனால் அது தப்பியோடியது. அதைத் தொடா்ந்து 14ஆம் தேதி ஆபரேஷன் கருப்பு என்ற பெயரில் யானையைப் பிடிக்க வனப் பணியாளா்களை 3 குழுக்களாகப் பிரித்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனா்.

அப்போது இரியபுரம் விவசாய நிலத்துக்குள் மீண்டும் புகுந்த கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கி முயன்றனா். ஆனால் மயக்க ஊசி பயனளிக்காத நிலையில் யானை வேகமாக எழுந்து காட்டுக்குள் தப்பியோடியது. கடந்த 8 நாள்களில் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையைப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மனசோா்வடைந்த வனத் துறையினா் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனா். வரும் 26ஆம் தேதி கருப்பன் யானையை பிடிக்கும் பணி மீண்டும் தொடரும் என்றும் அதுவரை யானையின் நடமாட்டம் குறித்து தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com