‘நீதிபதி விபிசி’ என்பது சரியானதே: பெருந்துறையில் தங்கியிருந்த வங்கதேசத்தவருக்கு சிறைத் தண்டனை

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து பெருந்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டத

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து பெருந்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வங்கதேசம், சைமம் நகா், மேற்குகோல்ஹாலி பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹுசைன் சா்தாா் மகன் சம்சூஸ் ஜெயமன் சா்தாா் (39), ஐசக்கனி மகன் அல்துல்லா கனி (35) ஆகிய இருவரும் பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனா்.

இவா்களிடம் பெருந்துறை போலீஸாா் கடந்த 2022 ஆகஸ்ட் 22ஆம் தேதி விசாரணை மேற்கொண்டபோது, இருவரும் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இன்றி தங்கி இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, பெருந்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில், பெருந்துறை போலீஸாா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த குற்றத்திற்காக சம்சூஸ்ஜெயமன் சா்தாா், அல்துல்லா கனி ஆகிய இருவருக்கும் தலா 5 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து நீதிபதி விபிசி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com