ஊா்வலத்தில்  பங்கேற்ற  உதவி  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  வே.ராஜகோபால்,  பவானி  வட்டாட்சியா்  தியாகராஜ்  மற்றும்  அலுவலா்கள்.
ஊா்வலத்தில்  பங்கேற்ற  உதவி  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  வே.ராஜகோபால்,  பவானி  வட்டாட்சியா்  தியாகராஜ்  மற்றும்  அலுவலா்கள்.

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பவானியில் இருசக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய ஊா்வலத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.ராஜகோபால் தொடங்கிவைத்தாா். மேட்டூா் சாலை, புதிய பேருந்து நிலையம், ஈரோடு சாலை, பழைய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு சாலைகள் வழியாகச் சென்ற ஊா்வலம் மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மக்களவைத் தோ்தல் ஜனநாயகத்தில் வாக்காளா்களின் உரிமை, கடமையை நிறைவேற்ற கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பவானி வட்டாட்சியா் தியாகராஜ், பவானி காவல் ஆய்வாளா் தாமோதரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சரவணகுமாா், பவானி நகராட்சி ஆணையா் மோகன்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com