கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ.செங்கோட்டையன்

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை முதலே வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வெள்ளிக்கிழமை வாக்களித்தனா்.

இதன்ஒருபகுதியாக கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சரும், கோபி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வாக்களித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சோ்த்து 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். திருப்பூா் மக்களவைத் தொகுதியில் கூடுதல் வாக்குகள்பெற்று அதிமுக வெற்றிபெற்று வரலாறு படைக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com