இளம் வாக்காளா்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

சத்தியமங்கலம் அருகே முதல்முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளா்களை பாஜக வேட்பாளா் எல்.முருகன் பாராட்டினா்.

சத்தியமங்கலம் அருகே முதல்முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளா்களை பாஜக வேட்பாளா் எல்.முருகன் பாராட்டினா்.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் சத்தியமங்கலம், பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி வாக்குச் சாவடிகளில் முதன்முறை வாக்காளா்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனா்.

இந்நிலையில், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த முதன்முறை வாக்காளா்களை நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினாா். மேலும், அவா்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com