கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

அந்தியூா் நிலை கண்காணிப்பு குழுவினா் நடத்திய சோதனையில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததால் ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ காண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டன.

ஆனால், கா்நாடக மாநிலத்தில் வரும் 26, மே 6 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாளவாடி, பண்ணாரி சோதனைச் சாவடி, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பா்கூா் பகுதியில் மட்டும் நிலை கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தியூா் அருகே வரட்டுப்பள்ளம் அணை சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடக மாநிலம், கொள்ளேகால் மாவட்டம், ராமாபுரத்தைச் சோ்ந்த மாதேவன் (32) உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 900த்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com