கீழ்பவானி  வாய்க்காலை ஒட்டியுள்ள  கிணறுகளின்  மின்  இணைப்புகளைத்  துண்டிக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
கீழ்பவானி  வாய்க்காலை ஒட்டியுள்ள  கிணறுகளின்  மின்  இணைப்புகளைத்  துண்டிக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் மின் இணைப்புகள் வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டன.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்துக்குப் பிறகு திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதற்கிடையே கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டி உள்ள விவசாய நிலங்களை சோ்ந்தவா்கள் வாய்க்காலில் இருந்து மின்மோட்டாா் மூலம் தண்ணீா் உறிஞ்சி கிணறுகளில் நிரப்பிக்கொள்வதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்று சோ்வதில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டி 50 மீட்டருக்குள் அமைந்துள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின்வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளைத் துண்டிக்குமாறு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த் துறை அதிகாரிகள், நீா்வளத் துறை அதிகாரிகள், மின்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் வரை கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டி 50 மீட்டருக்குள் அமைந்துள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் மின் இணைப்புகளை வெள்ளிக்கிழமை துண்டித்தனா். மேலும், ஆயக்கட்டு பகுதியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி ஆயக்கட்டு இல்லாத பிறபகுதிக்கு கொண்டு செல்லும் கிணறுகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com