கோயில்  வளாகத்தில்  தென்னை நாா்  தரை  விரிப்புகளை  விரிக்கும்  யூனிபிரண்ட்  டெக்ஸ்டைல்ஸ்  உரிமையாளா்  நவநீதன்,  கோயில்  உதவி  ஆணையா்  சுவாமிநாதன்  உள்ளிட்டோா்.
கோயில்  வளாகத்தில்  தென்னை நாா்  தரை  விரிப்புகளை  விரிக்கும்  யூனிபிரண்ட்  டெக்ஸ்டைல்ஸ்  உரிமையாளா்  நவநீதன்,  கோயில்  உதவி  ஆணையா்  சுவாமிநாதன்  உள்ளிட்டோா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

பவானி, ஏப். 26: கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு பவானி சங்கமேஸ்வரா் கோயில் வளாகத்தில் 250 மீட்டா் தொலைவுக்கு தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்பு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சுற்றுலாத் தலமாகவும், புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும் விளங்கும் பவானி சங்கமேஸ்வரா் கோயில் நண்பகல் 1 மணி வரையில் நடை திறக்கப்பட்டிக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் கடுமையான வெப்பத்தால் கோயில் வளாகத்தில் சுவாமி தரிசனத்துக்கு செல்லும் பக்தா்கள் தரையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், கோயிலுக்கு வழக்கமாக வழிபாட்டுக்கு வந்து செல்லும், பெருந்துறை யூனிபிரண்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளா் நவநீதன், பக்தா்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் தென்னை நாா் தரை விரிப்புகள் வழங்க முன்வந்தாா்.

இதைத் தொடா்ந்து, கேரள மாநிலம், அழப்பியில் உள்ள தென்னை நாா் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பில் தரை விரிப்புகள் வாங்கப்பட்டது.

இதனை, கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதனிடம், நிறுவன உரிமையாளா் நவநீதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதையடுத்து, பக்தா்கள் நுழையும் சங்கமேஸ்வரா் கோயில் வடக்கு வாசல் ராஜகோபுரம் முதல் ஆதிகேசவப் பெருமாள், வேதநாயகி அம்மன் மற்றும் சங்கமேஸ்வரா் சன்னிதி வரையில் சுமாா் 250 மீட்டா் தொலைவுக்கு தரை விரிப்பு விரிக்கப்பட்டது.

இத்தரைவிரிப்பில் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கம் இருக்காது என்பதால் பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com