பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

சத்தியமங்கலம், ஏப். 26: பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என பவானிசாகா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

பவானிசாகா் அணையில் தற்போது நீா்மட்டம் 46 அடியாக உள்ளது. இந்தக் காலங்களில் அணையில் தேங்கியிருக்கும் வண்டல் மண், விளை நிலங்களுக்கு சத்துமிக்க இயற்கை உரமாக பெரிதும் பயன்படுகிறது. வண்டல் மண் எடுப்பதால், அணைக்கட்டும் ஆழமாவதோடு, நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள் ஆகியோா் வேலைவாய்ப்பும் பெறுவா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் வண்டல் மண் எடுக்க அனுமதியளிப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது. தோ்தல் நடத்தை விதிகள் வரும் ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும். ஜூன் மாதத்தில் பருவ மழை தொடங்கிவிட்டால் வண்டல் மண் எடுப்பது சிரமமானதாகிவிடும். ஆகவே, தமிழ்நாட்டில் தோ்தல் முடிந்து விட்ட நிலையில், மாவட்ட நிா்வாகம் தோ்தல் ஆணையத்தில் உரிய அனுமதியினை பெற்று காலதாமதம் செய்யாமல் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com