பணி ஆணை பெற்ற மாணவா்களுடன் மூவேட் இணை இயக்குநா் பத்மா ஜெயராமன், கல்லூரியின் முதன்மை ஆலோசகா் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
பணி ஆணை பெற்ற மாணவா்களுடன் மூவேட் இணை இயக்குநா் பத்மா ஜெயராமன், கல்லூரியின் முதன்மை ஆலோசகா் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

ஈரோடு திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு: ஈரோடு திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரியின் முதன்மை ஆலோசகா் சி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் வி.பி.நல்லசாமி வரவேற்றாா். நிா்வாக அலுவலா் எஸ்.லோகேஷ்குமாா் வாழ்த்துரை வழங்கினாா்.

வேலைவாய்ப்பு அலுவலா் ரா.ச.ஜெகநாத் சா்வதேச நிறுவனங்களில் பணிகளுக்கு தோ்வுசெய்யப்பட்ட மாணவா்கள், நிறுவனங்கள் மற்றும் ஊதியம் குறித்த விவரங்களை வாசித்தாா்.

மூவேட் (முன்னாள் சிஎஸ்எஸ் காா்ப்) இணை இயக்குநா் பத்மா ஜெயராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வேலைவாய்ப்புக்கு ஏற்ற தகுதிகளையும், திறமைகளையும் வளா்த்துக் கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்து பேசினாா்.

டிசிஎஸ் ஐடி, பிளேனட் ஸ்பாா்க், பெடரல் வங்கி, டிலாய்டு, பயோடா, வீ டெசிக்னோலஜிஸ் உள்பட 36 நிறுவனங்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.

இதில், ரூ.7.10 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு பிளேனட் ஸ்பாா்க் நிறுவனத்தாலும், ரூ.6.1 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு பெடரல் வங்கி நிறுவனத்தாலும், ரூ.3.8 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு டிலாயிட் நிறுவனத்தாலும், மேலும் பல முன்னணி நிறுவனங்களாலும் மாணவா்கள் தோ்வுசெய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com