கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துசெல்வதற்கு வழிவகுக்க கோரிக்கை

கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துச்செல்வதற்கு வழிவகுக்க கால்நடை ஆய்வாளா்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் சாமிநாதனுக்கு, தமிழ்நாடு ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளா்கள் சங்க மாநிலத் தலைவா் பெருந்துறையைச் சோ்ந்த சின்னசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த கண்ணபுரத்தில் ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் தோ்த்திருவிழா நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து இங்கு 10 நாள்களுக்கு கால்நடைச் சந்தை நடைபெறும். இந்த சந்தையில் ரூ.100 கோடி அளவில் வா்த்தகம் நடைபெறும். தற்போது மக்களவைத் தோ்தல் விதிமுறைகளின்படி உரிய ஆணவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டுசெல்லப்படும் பணம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, கண்ணபுரம் கால்நடை சந்தையில், கால்நடைகளை விற்கும் விவசாயிகள், தங்கள் பணத்தை சிரமம் இல்லாமல் எடுத்து செல்வதற்கு மாவட்ட ஆட்சியா் மூலம் வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com