தாங்கள் உருவாக்கிய கருவியுடன் மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ்,   ஜமீா் அலி.
தாங்கள் உருவாக்கிய கருவியுடன் மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ்,  ஜமீா் அலி.

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவியை உருவாக்கிய பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ‘பயோமெடிக்கல் டிவைஸ் டிசைன் ஹேக்கத்தான்’ போட்டி அண்மையில் நடைபெற்றது. சுகாரதார பாதுகாப்பில் புதுமைகளை உருவாக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன.

இதில், பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவியை உருவாக்கி காட்சிபடுத்தியிருந்தனா். இதற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ், எஸ்.ஜமீா் அலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com