பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் திருப்பூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் பவானியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளரை அறிமுகப்படுத்திவைத்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா். கூட்டத்துக்கு ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் எம்பி வி.சத்யபாமா, பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பவானி ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம்.தங்கவேலு, ஜெகதீசன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளா்கள் பி.ஜி.முனியப்பன், மேகநாதன், பவானி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com