அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 மையங்களில் நடைபெற்றுவந்த

‘நீட்’ தோ்வு பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்பு நுழைவுக்கான ‘நீட்’ தோ்வு வரும் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 மையங்களில் 4,700 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுத உள்ளனா்.

அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று ‘நீட்’ தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 236 மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ‘நீட்’ தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, காலை முதல் மாலை வரை கடந்த சில மாதங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

‘நீட்’ தோ்வு வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ‘நீட்’ தோ்வு பயிற்சி மைய வகுப்புகள் வியாழக்கிழமை நிறைவடைந்ததாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com