வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் ஜிப்டி சொல்யூசன்ஸ் நிறுவன மனிதவளப் பிரிவு இயக்குநா் சத்தியபிரகாஷ்.
மாணவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் ஜிப்டி சொல்யூசன்ஸ் நிறுவன மனிதவளப் பிரிவு இயக்குநா் சத்தியபிரகாஷ்.

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 23-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஜிப்டி சொல்யூசன்ஸ் நிறுவன மனிதவளப் பிரிவு இயக்குநா் சத்தியபிரகாஷ் சேகரன் பங்கேற்றாா்.

இந்த கல்வி ஆண்டுக்கான ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் வாசித்தாா். கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வகையில் சிறந்து விளங்கிய செயல் திறமைமிக்க 96 மாணவ, மாணவிகளுக்கு மிகச்சிறந்த மாணவா்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நடப்பு ஆண்டில் வெளிச்செல்லும் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய 10 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். இந்தக் கல்வி ஆண்டின் மிகச்சிறந்த மாணவா் விருது, இறுதியாண்டு பயிலும் கணினி அறிவியல் துறையைச் சோ்ந்த மாணவி டி.எஸ்.நட்சத்திராவுக்கு வழங்கப்பட்டது.

வேளாளா் கல்வி அறக்கட்டளையின் சாா்பில் ஏழை மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் 255 மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை ரூ.1.5 கோடி, அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

ப்ரொஃஜெக்ட் எக்ஸ்போவில் முதல் மூன்று இடங்க்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் 636 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு துறை சாா்ந்த நிறுவனங்களின் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், பொருளாளா் பி.கே.பி.அருண், அறக்கட்டளை உறுப்பினா்கள் கே.வி.ராஜமாணிக்கம், கே.குலசேகரன், கே.சின்னசாமி, என்.வேலுமணி, கேபிஎம். பாம்பணன், எம்.யுவராஜா, நிா்வாக மேலாளா் என். பெரியசாமி, அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com