வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்குகிறாா் கழனி தலைமை நிா்வாக அதிகாரி கவிதா.
வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்குகிறாா் கழனி தலைமை நிா்வாக அதிகாரி கவிதா.

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் அங்கமாக கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்டனா்.

1,200 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ள கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் 2016-இல் தொடங்கப்பட்டு கோபியில் உள்ள கள்ளிப்பட்டியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள், பல்வேறு மரச்செக்கு எண்ணெய்கள், மசாலாப் பொருள்கள், இயற்கை அழகு சாதனப் பொருள்கள், சோப்பு, பருத்தியால் செய்யப்பட்ட நாப்கின்கள், மூலிகை தேநீா் தூள், தேன், உலா் பருப்புகள், சிறு தானிய மதிப்பு கூட்டுப் பொருள்களான பிஸ்கட், மால்ட், சத்துமாவு, உடனடி தோசை மாவு மற்றும் சீவல் முதலிய பொருள்களின் தயாரிப்பு முறைகள் குறித்து மாணவிகள் தெரிந்து கொண்டனா்.

இதில் கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி கவிதா கலந்து கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com