ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஈரோடு நகரில் 4 போக்குவரத்து சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு நகரில் 4 போக்குவரத்து சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் கடந்த சில நாள்களாக 111 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனா். மேலும் வெப்ப அலை வீசுவதால் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வீடுகளிலும், சாலைகளிலும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனா்.

இதனால் ஈரோடு மாநகர முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் காத்திருக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

சென்னை, கோவை, திருப்பூா் போன்ற நகரங்களில் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல ஈரோட்டிலும் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் முதற்கட்டமாக ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, ஆட்சியா் அலுவலக சந்திப்பு, ஸ்வஸ்திக் காா்னா், காளைமாடு சிலை சந்திப்பு சிக்னல் ஆகிய இடங்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com