அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கோபி, பவானி, சத்தியமங்கலம் உள்பட 8 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது.

குளிா்சாதன வசதி கொண்ட இந்த வாா்டில் வெப்ப அலா்ஜியால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சைக்கு வருபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப எரிச்சலால் புண் ஏற்படும், தோல் சிவப்பாக மாறும், கால்களில் நரம்பு இழுத்துக் கொள்ளும், நீா்ச்சத்து குறைவால் வயிற்று வலி ஏற்படும்.

கோடை காலத்தில் உடலில் நீா் சத்து குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. வெப்ப அலா்ஜி அல்லது வெப்ப பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும்போது, உடனடியாக உடல் வெப்பத்தை குறைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். வெப்ப நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com