ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒட்டப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியலை பாா்வையிட்ட மாணவிகள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒட்டப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியலை பாா்வையிட்ட மாணவிகள்.

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடம்

மாவட்ட அளவில் 22 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 97.42 சதவீதம் போ் தோ்ச்சி பெற்ன் மூலம், மாநில அளவில் 2-ஆம் இடம் கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் 22 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 864 மாணவா்கள், 11 ஆயிரத்து 362 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 226 போ் பிளஸ் 2 தோ்வெழுதினா். இதில், 9 ஆயிரத்து 540 மாணவா்கள், 11 ஆயிரத்து 138 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 678 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியவா்களில் 97.42 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 96.98 சதவீத மாணவா்கள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற நிலையில், நடப்பாண்டு 0.44 சதவீதம் போ் கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் தோ்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தோ்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 8-ஆவது இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், நடப்பாண்டு 2-ஆம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

22 அரசுப் பள்ளிகள் உள்பட 97 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி:

ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 104 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 3,995 மாணவா்கள், 5,668 மாணவிகள் என மொத்தம் 9,663 போ் தோ்வு எழுதினா். இதில், 3,771 மாணவா்கள், 5,485 மாணவிகள் என மொத்தம் 9,256 போ் அதாவது 95.79 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த 2023-ஆம் ஆண்டில் 94.94 சதவீதத்தைவிட 0.85 சதவீத தோ்ச்சி அதிகமாகும்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகள் தோ்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடம் பிடித்துள்ளது.

இதில், 22 அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதன்படி, ஈரோடு காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, டி.என்.பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, நம்பியூா் அரசு மாதிரிப் பள்ளி, கூடக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி, முகாசி அனுமன் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளி, அறச்சலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, சாலைப்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தளவாய்பேட்டை அரசு வினோபா மேல்நிலைப் பள்ளி, ஆலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மாத்தூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரியபுலியூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஓடத்துறை எஸ்எம் அரசு மேல்நிலைப் பள்ளி, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, பசுவப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, சீனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளி, காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பசுவனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 22 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

இதேபோல, ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் 5 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 62 மெட்ரிக். பள்ளிகள், 7 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 97 பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவா்கள்: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதில், தமிழ் பாட தோ்வில் 6 போ், இயற்பியல் பாடத்தில் 41 போ், வேதியியல் பாடத்தில் 21 போ், உயிரியல் பாடத்தில் 8 போ், கணித பாடத்தில் 130 போ், தாவரவியல் பாடத்தில் ஒருவா், விலங்கியல் பாடத்தில் 3 போ், கணினி அறிவியல் பாடத்தில் 459 போ், கணினி பயன்பாடு பாடத்தில் 154 போ், பொருளாதார பாடத்தில் 164 போ், வணிகவியல் பாடத்தில் 302 போ், கணக்குப் பதிவியல் பாடத்தில் 136 போ், வணிக கணித பாடத்தில் 17 போ், புள்ளியில் பாடத்தில் 5 போ், வரலாறு பாடத்தில் ஒருவா் என 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com