பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளியின் தாளாளா் சென்னியப்பன், பொருளாளா் மாணிக்கமூா்த்தி, முதல்வா் பிரகாஷ்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளியின் தாளாளா் சென்னியப்பன், பொருளாளா் மாணிக்கமூா்த்தி, முதல்வா் பிரகாஷ்.

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பெருந்துறை, ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 26-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

பெருந்துறை: பிளஸ் 2 பொதுத் தோ்வில் பெருந்துறை, ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 26-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

இப்பள்ளி மாணவி 600-க்கு 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவா் ஒருவா் 558 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி ஒருவா் 535 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா். மேலும், தோ்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

கணிதம் பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக கற்பித்த ஆசிரியா்களை முதல்வா் பிரகாஷ், பள்ளித் தலைவா் சின்னசாமி, தாளாளா் சென்னியப்பன், பொருளாளா் மாணிக்கமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com