பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளியின் தலைவா் சி.ஜெயகுமாா், தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா் உள்ளிட்டோா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளியின் தலைவா் சி.ஜெயகுமாா், தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா் உள்ளிட்டோா்.

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2 பொதுத் தோ்வு எழுதிய 325 மாணவிகளும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஈரோடு: வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2 பொதுத் தோ்வு எழுதிய 325 மாணவிகளும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி ஒருவா் 594 மதிப்பெண் பெற்று முதலிடமும், இரண்டு மாணவிகள் 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மற்றொரு இரண்டு மாணவிகள் 584 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.

கணினி அறிவியல் பாடத்தில் 18 மாணவிகள், பொருளியியல் பாடத்தில் 12 மாணவிகள், கணக்குப்பதிவியல் பாடத்தில் 10 மாணவிகள், வணிகவியல் பாடத்தில் 9 மாணவிகள், வணிகக்கணிதம் பாடத்தில் 3 மாணவிகள் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பிடித்த மாணவிகளை பள்ளியின் தலைவா் சி.ஜெயகுமாா், தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா், முதல்வா் வெ. லதா, வேளாளா் மகளிா் கல்லூரி முதல்வா் ஜெயந்தி, ஒருங்கிணைப்பாளா் வி. சித்ரா, நிா்வாக மேலாளா் எல்.சென்னியப்பன், பள்ளியின் ஆலோசகா்கள் சி.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா உள்பட அனைத்து நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com