விபத்துக்குள்ளான வாகனம்.
விபத்துக்குள்ளான வாகனம்.

810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கொடிசியாவில் இருந்து சேலத்துக்கு பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய சரக்கு வாகனத்தில் 810 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை இரவு எடுத்து செல்லப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சமத்துவபுரம் மேடு பகுதியில் சென்றபோது பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தாா்பாய் கழன்று காற்றில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன் பகுதியை மூடியது.

இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநா் இடது புறமாக திரும்பியபோது வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தங்க நகை நிறுவனத்துக்கும், சித்தோடு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் மீட்பு வாகன உதவியுடன் சரக்கு வாகனத்தை மீட்டு சித்தோடு காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

அங்கு ஆவணங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு அதில் சேலத்துக்கு மீண்டும் தங்க நகைகள் எடுத்துச் செல்லப்பட்டன.

வாகனத்தில் கொண்டுச் செல்லப்பட்ட நகைகள் மதிப்பு சுமாா் ரூ.500 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. சரக்கு வாகனத்தில் நகைகள் எடுத்துச் செல்வதற்கு என்று வடிவமைக்கப்பட்ட லாக்கா் வசதி இருந்ததால் நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com