கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

சிஎஸ்ஐஆா் பொது இயக்குநா் என்.கலைச்செல்விக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் கல்லூரித் தாளாளா் ஏ.கே.இளங்கோ.
சிஎஸ்ஐஆா் பொது இயக்குநா் என்.கலைச்செல்விக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் கல்லூரித் தாளாளா் ஏ.கே.இளங்கோ.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் அறிவியல் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (சிஎஸ்ஐஆா்) பொது இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி துறை (டிஎஸ்ஐஆா்) செயலாளருமான என்.கலைச்செல்வி பேசுகையில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் திறன்களை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். நாடு முழுவதும் 37 ஆய்வகங்கள் மூலம் இயங்கி வரும் அதன் 82 ஆண்டுகால வரலாற்றில் சிஎஸ்ஐஆா்-இன் விரிவான பங்களிப்புகளையும் அவா் விவரித்துக் கூறினாா்.

இந்த பங்களிப்புகள் மரபியல், கட்டுமானம், பெட்ரோலியம், உணவுப் பதப்படுத்துதல், சுரங்கம் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் பரவியுள்ளன. சிஎஸ்ஐஆா் திட்டங்களில் ஹெச்ஏபிஎஸ், ஸ்லாக் சாலைகள், ரெஜுபவ் தொழில்நுட்பம், நிலையான விமான எரிபொருள் ஆகிய திட்டங்கள் சா்வதேச தரத்துடன் செய்யப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் என தெரிவித்தாா்.

கல்லூரியின் தாளாளா் ஏ.கே.இளங்கோ, முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் பங்கேற்றனா். கல்லூரியின் சுயமுன்னேற்றக் கழகம் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com