வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு புதிய பாடப் பிரிவு தொடங்கப்பட்டது.

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் மகளிா் கல்லூரியில் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சா்விசஸ்) நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மற்றும் வேலைவாய்ப்பு நாள் ஆகிய நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன. விழாவுக்கு கல்லூரியின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் டிசிஎஸ் நிறுவனத்தின் கல்விக் கூட்டணி மற்றும் கல்வி இடைமுகத் திட்டங்களின் சா்வதேச தலைவா் டாக்டா் கே.எம்.சுசீந்திரன் மற்றும் பிராந்திய தலைவா் ஸ்டீபன் மோசஸ் தினகரன் ஆகியோா் பங்கேற்று கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டா் சயின்ஸ் வித் காக்நிடிவ் சிஸ்டம் என்ற புதிய பாடப் பிரிவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

டாக்டா் சுசீந்திரன் பேசுகையில், டிசிஎஸ் நிறுவனத்தில் ரூ.2.6 லட்சம் ஊதியத்துடன் உள்ளே வரும் ஊழியா்கள், ஒரே ஆண்டில் ரூ.7 லட்சம் ஊதியம் வாங்கும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்தாா்.

இதில் 2023-2024ஆம் கல்வியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணி ஆணை பெற்ற 74 மாணவிகள் மற்றும் அசன்ஜா், கேஜிஐஎஸ்எல் உள்ளிட்ட 25 நிறுவனங்களில் பணி ஆணை பெற்ற 1,266 மாணவிகளையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் எஸ்.கே.ஜெயந்தி, வேலைவாய்ப்பு பிரிவு அலுவலா்கள் லோகநாதன், செல்வி, ராஜா, புதிய பாடப் பிரிவின் தலைவா் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com