விவசாயிகளுக்கு மண் வள அட்டை குறித்து விளக்கம் அளிக்கும் 
ஜே.கே. கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள்.
விவசாயிகளுக்கு மண் வள அட்டை குறித்து விளக்கம் அளிக்கும் ஜே.கே. கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

பெருந்துறை, மே 9 : பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் கிராமத்தில் மண் வள அட்டையின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கோபியை அடுத்த டி.என்.பாளையம் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி 4- ஆம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின்கீழ், பெருந்துறையில் தங்கி விவசாயம் குறித்து அப்பகுதியை சோ்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் கிராமத்தில் மண் வள அட்டையின் பயன்கள், விண்ணப்பித்தல் மற்றும் பெறும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கி கூறினா்.

மேலும், மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் உழவன் செயலி பற்றி யும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com