மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனையானது.

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 45 டன் எள்ளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் வெள்ளை ரகம் கிலோ ரூ.107.68 முதல் ரூ.141.99 வரை, கருப்பு ரகம் ரூ.114.69 முதல் ரூ.141.39 வரை, சிவப்பு ரகம் ரூ.104.69 முதல் ரூ.138.39 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.61.40 லட்சம் மதிப்பிலான எள் விற்பனையானது.

மேலும் ரூ.30 ஆயிரத்துக்கு தேங்காய்களும், ரூ.21 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்புகளும் விற்பனையாயின.

X
Dinamani
www.dinamani.com