பேரூராட்சிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்ட விவகாரம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி

பேரூராட்சிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்ட விவகாரம் சம்பந்தமாக மஞ்சூர் பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பேரூராட்சிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்ட விவகாரம் சம்பந்தமாக மஞ்சூர் பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

மஞ்சூர் அருகே, கீழ்குந்தா பேரூராட்சிக்குச் சொந்தமான 11 ஏக்கர் தேயிலை தோட்டம் குந்தா பாலத்தில் உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த 22 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதில், பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின், பேரூராட்சி நிர்வாகம் தனியார் ஒருவருக்கு அந்த தேயிலைத் தோட்டத்தை குத்தகைக்கு விட்டது. ஆனால், ஏற்கெனவே ஆக்கிரப்பு செய்திருந்தவர்கள், குத்தகைதாரரை தேயிலைத் தோட்டத்தில் பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த குத்தகைதாரர் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் குத்தகைதாரரின் பணத்தைத் திருப்பி வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்டத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு குத்தகைதாரரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்பாளர்கள் தேயிலைத் தோட்டத்தைத் தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மஞ்சூர் பஜார் பகுதியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த குந்தா வட்டாட்சியர் சிக் அனுமன் சம்பவட இடத்துக்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆகஸ்ட் 8-ஆம் தேதி உதகையில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com