கூடலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பேரவைக் கூட்டம் ஆவின் தலைவர் மில்லர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து 2016-17-ஆம் ஆண்டின் நிகர லாபத்தில் 50 சதவீதத் தொகையை 470 உறுப்பினர்களுக்கும் பிரித்து போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், துணைத் தலைவர் சளிவயல் ஷாஜி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள், இணை இயக்குநர் கணபதி, மருத்துவர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.