புரூக்லேண்ட் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தம்: பொதுமக்கள் அதிருப்தி

குன்னூர் புரூக்லேண்ட் சாலைப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

குன்னூர் புரூக்லேண்ட் சாலைப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட மூன்றாவது வார்டில் உள்ள புரூக்லேண்ட் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சியின் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 11 லட்சத்து 97 ஆயிரத்து 600 மதிப்பில் 300 மீட்டர் தொலைவுக்கு இந்த சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதியில் டிசம்பர் 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது தரமில்லாமல் இருந்த இடங்களை ஆய்வு செய்து உடனடியாகச் சீரமைக்க உத்தரவிட்டார். இந்த சாலையின் குறிப்பிட்ட பகுதி வரை சீரமைக்கப்பட்ட பிறகு இரு சாலைகள் பிரிந்து செல்லும் இடங்களில் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு கற்கள் கொட்டப்பட்டுள்ளன.சீரமைக்கப்படாமல் உள்ள இந்த சாலையின் வளைவுப் பகுதியில் மழையால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் மண் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மண் திட்டுக்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், மேல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து, அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து முழுமையாக சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com